ARTICLE AD BOX
வைரமுத்துவின் வைர வரிகள்
தமிழ் சினிமா இசை உலகில் கவிப்பேரரசு என்று போற்றப்பட்ட பாடலாசிரியராக வலம் வந்தவர்தான் வைரமுத்து. தனது 40 வருட திரையுலகப் பயணத்தில் 7,500 பாடல்களுக்கும் மேல் எழுதியவர் இவர். இவர் எழுதிய பாடல் வரிகளை மிகவும் தனித்துவமானவை. கலைரசனையும் வர்ணனையும் இவரது பாடலில் பீரிடும்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் பல ஆண்டுகள் பயணித்த இவரை, “Me Too” புகார் சினிமாவில் இருந்து சற்று ஓரங்கட்டி வைத்தது. சமீப காலமாக பெரிதாக எந்த திரைப்பாடல்களையும் இவர் எழுதவில்லை. எழுத வாய்ப்புகள் அமையவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆதலால் இவரது ரசிகர்கள் பலரும் இவரது கம்பேக்கிற்க்காக ஏங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் தன்னுடைய பாடல் வரிகளை படத்தின் தலைப்புகளாக பயன்படுத்துபவர்கள் தன்னுடைய அனுமதியை கோரவில்லை என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இதுதான் உங்கள் நாகரீகமா?
“என்னுடைய பல்லவிகள் பலவற்றை தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை” என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
மேலும் அதில், “ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் அல்லவா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
