ARTICLE AD BOX
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், “திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பது ஒரு மாயை. உண்மையில், திமுக கூட்டணி உறுதியானது. அந்த அளவிற்கு தளர்ச்சி எதுவும் இல்லை என்பதே எதார்த்தம். பாஜகவும் இதே கனவில்தான் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணமும் அதுவாகவே இருக்கிறது. மேலும், மறைமுகமாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு தொண்டு செய்பவர்களின் ஆசையும் அதுவே. ஆனால் அவர்கள் கனவு நனவாகாது,” எனத் தெரிவித்தார்.
இவ்வாறு கூறிய திருமாவளவன், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை சாடி, திமுக கூட்டணியின் வலிமை குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

1 month ago
33









English (US) ·