ARTICLE AD BOX
நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் கைக்கோர்த்து வந்தது பேசுபொருளானது.
இதையும் படியுங்க: வடசென்னை 2 படத்தில் சிம்பு? சிறப்பா பண்ணுங்க- வாழ்த்தி அனுப்பிய தனுஷ்! நம்பவே முடியலையே…
இருவரும் காதலிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், அதை இருவரும் மறுத்து வருகின்றனர். ஆர்த்தி தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கெனிஷா ஒபனாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரவி மோகனும் நானும் நண்பர்கள்தான். இதை அதிக முறை நான் கூறியுள்ளேன். ஆனால் இன்னும் என்னை பற்றி, என் பெற்றோரை பற்றி தவறாக விமர்சித்து வருகின்றனர்.
நான் ஹீலர் இல்லை, Spiritual Healer. நானும் ரவி சாரும் சில தொழில்களை இணைந்து நடத்த உள்ளோம். அதனால் எங்களை பற்றி பலவித வதந்திகளை பரவுகிறது.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என பலரும கூறுகிறார்கள். நான் கர்ப்பம் இல்லை, யார் என்னை என்ன சொல்கிறார்களோ அது அவர்களுக்கே திரும்ப வரும். நாங்கள் என்ன தொழில் செய்ய போகிறோம் என்பது குறிதது வரும் 16ஆம் தேதி அறிவிக்க உள்ளோம்.
உண்மை எது, பொய் எது என ஒரு நாள் அனைவருக்கும் தெரியவரும். அதுவரை பிரியாணி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க என தனது ஹேட்டர்ஸ்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
