நாமக்கல் மூதாட்டி கொலையில் திருப்பம்… கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்..!!

2 days ago 11
ARTICLE AD BOX

நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுக்கா சித்தம்பூண்டி கிராமம் கொளத்துப்பாளையம் தோட்டத்து பகுதியில் தனியாக வசித்து வருபவர் சாமியாத்தாள் (வயது 65).

இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் , கிருஷ்ணவேணி என்கிற மகளும் உள்ளனர். சாமியத்தாள் மட்டும் தனியாக தோட்டத்தில் வசித்து வந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் வந்து சாமியத்தாளை முகம், வாய்ப்பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

சாமியாத்தாள் சத்தம் போட்டதில் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது சாமியாத்தா ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

அப்பொழுது என்னை இருவர் வெட்டிவிட்டு ஓடி விட்டனர் என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் சாமியத்தாளின் மகள் கிருஷ்ணவேணிக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணவேணி சாமி சாமியாத்தாளை ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த நிலையில் சாமியாத்தால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

பின்பு நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா டி ஐ ஜி கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொலை செய்யப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

தோட்டத்து கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து துரித விசாரணை மேற்கொண்டனர். நகைக்காக இந்த கொலை நடந்ததா என விசாரித்த போது, நகை பத்திரமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாளவாடி பகுதியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மூதாட்டி சாமியாத்தாளை கொலை செய்தாக தாளவாடியை சேர்ந்த ஆனந்தன், அஜித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நகைக்காக மூதாட்டி கொடூர கொலை

மூதாட்டி வீட்டில் 2 வருடங்களுக்கு முன் பணியாற்றிய ஆனந்தன் என்பவர் அஜித்துடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அடிக்கடி சாமியாத்தாள் வீட்டிற்கு வரும் ஆனந்தன் பணம் வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. அண்மையில் மூதாட்டியை சந்தித்து பணம் கேட்டு தராததால் கொலை செய்து நகையை திருட ஆனந்தன் திட்டம் தீட்டியுள்ளான்.

நணபர் அஜித்துடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து நகையை பறிக்க முயன்ற ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளான். மூதாட்டி சாமியாத்தாள் எப்போதும் நகையை அணிந்திருப்பார். ஆனால் இரவு நேரங்களில் நகையை கழட்டி சமையலறையில் வைப்பது வழக்கம் என்பதால் நகையை தேடி தேடி கிடைக்காததால் கொலை செய்தது தெரியவந்தது.

இதையமுத்து கொளத்துப்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் கைதான 2 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ய வந்தனர்.

அப்போது கைது செய்யப்ப்டட்வர்களின் முகத்தை காட்ட வேண்டும் என மூதாட்டியின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர் மூதாட்டியிடம் பணிபுரிந்த ஆனந்தன் தானா எனன்பதை உறுதி செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • journalist anthanan criticize gangai amaran for supporting Chinmayi கங்கை அமரன் மட்டும் என்ன யோக்கியமா? சின்மயி-வைரமுத்து விவகாரத்தில் கடுப்பான பிரபலம்!
  • Continue Reading

    Read Entire Article