பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி அழிந்துவிடும் : கரூர் எம்பி ஜோதிமணி விமர்சனம்.!!

2 days ago 14
ARTICLE AD BOX

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்றக் கட்டமைப்பின் கீழ் வருவதால், அந்த பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது. இது கிராமப்புற மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இந்த அணுகுமுறை மனசாட்சியற்றது.

மணப்பாறை பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரும் பணி அவசியமாக இருப்பதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்டப்பணிகள் விரைவில் நடைபெறுவதில் மகிழ்ச்சி. ஆனால் ஒன்றிய அரசு நிதியை முறையாக வழங்காததால், பல திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்று மணல் கொள்ளை விவகாரம் குறித்து, “ஆற்று மணல் எடுக்கக்கூடாது என்பது என் தெளிவான நிலைப்பாடு. கட்டிடத் தொழில்நுட்பத்தில் மாற்று வழிகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டலாம்.

அத்துடன், நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதையும், மணல் கொள்ளையை தடுப்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அமலாக்கத்துறையின் செயல்பாடு “எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்கிறது. தமிழகத்தில் அமலாக்கத் துறையின் தலைமையகம் இருப்பதுபோல் நிலை உள்ளது.

பாஜகவின் இரட்டைக் கொள்கைகள் குறித்து, “பாஜகவினர் ஊழல்வாதிகள் என கூறுபவர்கள் அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டால் புனிதர்கள் ஆகிவிடுகின்றனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் அதிக ஊழல் நடைபெறுகிறது.“தமிழகத்தில் ஊழல் அதிகம் என அமித்ஷா கூறுவது அரசியல் நோக்கமுடையது,”

இந்தியா கூட்டணி குறித்து கேள்விக்கு, “பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் அனைத்தும் அழிந்துள்ளன. அதேபோல் அதிமுகவிற்கும் அதே நிலை ஏற்படும்.

“திமுக அரசு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலவகைத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்கள் மீண்டும் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

“தற்போது இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருப்பதால், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது,” என தெரிவித்தார்.

  • netflix sent mail to kamal haasan to stream thug life movie in 28 days கமல்ஹாசனுக்கு செக் வைத்த நெட்பிலிக்ஸ்? தக் லைஃப் தோல்வியால் வந்த வினை? அடக்கொடுமையே…
  • Continue Reading

    Read Entire Article