ARTICLE AD BOX
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவர் மத்தியில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஹோட்டல் அறையில் உல்லாசம்.. வேலை முடிந்ததும் இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய ரகசிய காதலன்!
இந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் என்பவர் நீக்கப்பட்டுள்ளார். கரூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் என்பவர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அன்புமணியின் இந்த அதிரடி நடவடிக்கை பாமக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது எடுத்துள்ள நடவடிக்கை சரியானதே என பாமகவில் உள்ள ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
