ARTICLE AD BOX
Me Too-ல் சிக்கிய வைரமுத்து
கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியதை தொடர்ந்து வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் அதே சமயத்தில் சின்மயி வைரமுத்து மீது வீணாக பொய்பழி சுமத்துகிறார் எனவும் பலர் சின்மயியை கண்டித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் வைரமுத்துவை தமிழ் திரையுலகம் விலக்கி வைத்தது. மேலும் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி தூக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சின்மயி தமிழ் சினிமாவில் பின்னணி பாடுவதிலும் மறைமுகமாக தடை செய்யப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சின்மயியுடன் ஒரு பேட்டியில் இயக்குனரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் Me Too விவகாரத்தில் சின்மயியை பலரும் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வைரமுத்து உத்தமன்?
அதற்கு கங்கை அமரன் சின்மயியை பார்த்து வைரமுத்துவை கலாய்க்கும் தொனியில், “ஏம்மா இப்படி வைரமுத்துவை பற்றி தவறாக பேசுற? அவர் தங்கமான ஆளு. அப்படிப்பட்ட ஆள் மேல நீ குற்றம் சொல்லலாமா? அவர் எப்படிப்பட்ட உத்தமமான ஆளு? அதிசயப் பிறவியான ஆளு” என நகைச்சுவையாக கூற, சின்மயி சிரித்துக்கொண்டே இருந்தார்.
அதன் பின் மீண்டும் பேசிய கங்கை அமரன், “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை” என்று மிகவும் வெளிப்படையாக கூறினார்.
மேலும் நிருபர், “வைரமுத்து உங்களுடைய நீண்டகால நண்பராக இருந்தவர்?” என்று கங்கை அமரனிடம் கேட்டபோது, அதற்கு அவர், “அதற்காக தப்பை கேட்காமல் இருந்துவிட முடியுமா? கூடாதுதானே” என்று பதிலளித்தார். சின்மயிக்கு ஆதரவு அளித்த கங்கை அமரனின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.