ARTICLE AD BOX
கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸ் காவல் துறையினர் மற்றும் போலீசார் பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்தப் பகுதியில் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதையும் படியுங்க: 5 லட்சம் இல்லைனா எனக்கு ஃபோன் பண்ணாதீங்க- மேடையில் புது கண்டிஷன் போட்ட மிஷ்கின்?
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 500 கிராம் கஞ்சா மற்றும் 610 போதை மாத்திரைகள் இருந்ததை கைப்பற்றினர்.
தொடர்ந்து பீளமேடு போலீஸ் குடியிருப்பு அருகில் வசிக்கும் அஜித் குமார் (21 ), ஆவாரம்பாளையம் இளங்கோ நகர், கோகுல் (25), பீளமேடு ஸ்ரீராம் நகர் இளவரசன் ( 21) ரத்தினபுரி மகாலிங்கம் தெரு வினோத் குமார் (34 ), அண்ணா தெரு ஹரிஷ் குமார் ( 34 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோன்று கோவை, மதுவிலக்கு பிரிவு ஜேசிஸ் உதயராஜ் மற்றும் போலீசார் கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் ரோட்டில் சிப்ஸ் கடை அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ரோகிநாத் சந்திரா ( வயது 68) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் 1.210 கிலோ கஞ்சா வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 ஆயிரம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
முதியவர் ரோகிநாத் சந்திரா கஞ்சாவை எங்கிருந்து கடத்திக் கொண்டு வந்தார், யாரிடம் ? கொடுப்பதற்காக அவற்றை மோட்டார் சைக்கிள் எடுத்து வந்தார் என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
