ARTICLE AD BOX
கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே பாலக்காடு பகுதியில் சேர்ந்த ஜெயிசன் ஜேக்கப் நகை வியாபாரி. இவர் கோவை வந்து தங்கம் வாங்கி விட்டு தனது கடை ஊழியர்கள் விஷ்ணு என்பவர் உடன் கலந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி காரில் திருச்சூர் நோக்கி எட்டிமடை அருகே காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக லாரியில் வந்தவர்களை திடீரென காரை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் அதில் இருந்து இறங்கிய கும்பல் காரில் இருந்த இரண்டு பேரையும் தாக்கி விட்டு ரூபாய் 1.25 கோடி மதிப்பு உள்ள தங்கத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த அன்சத், விஷ்ணு மற்றும் அஜித் ஆகியோரை கைது செய்தனர்.

ஜூலை 6 ஆம் தேதி ஆலாந்துரையைச் சேர்ந்த சனீஸ், எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோகுல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் கருண் சிவதாஸ் கடந்த மாதம் 4 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வாளையார் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது கேரளாவில் இருந்து கோவை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தைச் சேர்ந்த ரோஷன் என்பதும், அவர்கள் ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.
உடனே அவர்கள் இரண்டு பேரையும் காவல் துறையில் கைது செய்தனர்.இதன் மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்து உள்ளது.
