+1 தேர்வில் குறைந்த மதிப்பெண்.. திட்டிய தந்தை : மனஉளைச்சலில் மகன் எடுத்த விபரீத முடிவு!

11 months ago 110
ARTICLE AD BOX
1

+1 தேர்வில் குறைந்த மதிப்பெண்.. திட்டிய தந்தை : மனஉளைச்சலில் மகன் எடுத்த விபரீத முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு இவரது மகன் ஜெயசூர்யா (16) ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று வெளியான 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தனது மகனை வேலு கண்டித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த மாணவன் ஜெய சூர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் விவகாரம்.. பின்வாங்கியது RED PIX.. வீடியோவை DELETE செய்வதாக உறுதி!

ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மாணவனை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் ஜெயசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The station +1 தேர்வில் குறைந்த மதிப்பெண்.. திட்டிய தந்தை : மனஉளைச்சலில் மகன் எடுத்த விபரீத முடிவு! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article