10 பேரை அந்தரத்தில் சுழற்றி அடித்த பாலையா? இதுக்கு மேல Body தாங்காது விட்ருங்க சார்! 

3 weeks ago 22
ARTICLE AD BOX

ஒரே கையால் ரயிலை பின்னுக்குத் தள்ளியவர்

தெலுங்கு சினிமா உலகின் மாஸ் நடிகராக வலம் வருபவர்தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பலரும் செல்லமாக பாலையா என்று அழைப்பார்கள். தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களும் இவரது திரைப்படங்களை விரும்பி பார்ப்பது உண்டு. 

பொதுவாக தெலுங்கு சினிமாவில் மசாலாத்தனங்கள் தூக்கலாக இருக்கும். ஆனால் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்களில் மசாலாவை குடம் குடமாக கொட்டியிருப்பார்கள். சண்டைக் காட்சிகளில் தன்னை எதிர்த்து வரும் ஆட்களை அந்தரத்தில் பறக்கவிடுவார். ஒரு திரைப்படத்தில் இவரை ஒரு டிரெயின் மோத வர, அந்த சமயத்தில் இவர் அந்த ரயில் பின்னால் செல்லட்டும் என கையை காட்டுவார். அந்த ரயில் அப்படியே தானாக பின்னால் செல்லும். இந்த காட்சி மிகவும் பிரபலமான காட்சி ஆகும். 

nandamuri balakrishna starring akhanda 2 movie teaser launched

65 வயதாகும் பாலையா சமீபத்தில் “பகவந்த் கேசரி”, “டாகு மகாராஜ்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் மாஸ் ஹிட் அடித்த நிலையில் தற்போது “அகண்டா 2” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த “அகண்டா” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். 

சுழற்றி பறக்கவிட்ட பாலையா

இந்த நிலையில் “அகண்டா 2” திரைப்படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த டீசரில் பனிமலையில் பாலகிருஷ்ணா கையில் சூலாயுதத்துடன் பத்து பேரை அடித்து அந்தரத்தில் பறக்கவிடுகிறார். இதுவரை வெளிவந்த பாலகிருஷ்ணா திரைப்படங்களில் இடம்பெற்றதை விட அதிரடி சண்டைக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“அகண்டா 2” திரைப்படத்தை பொயபட்டி ஸ்ரீனு இயக்கியுள்ளார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராம் அசன்டா மற்றும் கோபி அசன்டா ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.  

  • nandamuri balakrishna starring akhanda 2 movie teaser launched 10 பேரை அந்தரத்தில் சுழற்றி அடித்த பாலையா? இதுக்கு மேல Body தாங்காது விட்ருங்க சார்! 
  • Continue Reading

    Read Entire Article