ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களின் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இயக்கி படம் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். அழகான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவருக்கு தற்போது மகனுடைய நிலையை எண்ணி வருந்தி வருகிறாராம்.
மகன் சினிமாவில் நுழைந்ததும், பெரிய ரவுண்டு வருவார் என நினைத்தாராம். ஆனால் மகனுக்கு அதிர்ஷ்டம் இல்லை. நல்ல நடிப்பு, நடனம், திறமை இருந்து சினிமாவில் மகனால் சாதிக்க முடியவில்லை.
இதையும் படியுங்க: போக்சோவில் கைதான நபருடன் பணியாற்றிய விக்னேஷ் சிவன்? நயன்தாராவை கட்டம் கட்டிய நெட்டிசன்கள்!
தான் அறிமுகம் செய்த நடிகைகள் டாப் உயரத்திற்கு வருகிறார்கள்,ஆனால் என் மகனால் சினிமாவில் சாதிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு உள்ளது.
இதனிடையே மகன் ஒரு டிவி ஷோவில் கலந்து கொண்ட போது உடன் இருந்து நடிகையுடன் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொண்ட அந்த ஜோடி 10 வருடமாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
குழந்தை குறித்து கேட்பவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்து வந்த அந்த ஜோடி, தற்போது பிரிய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தை இல்லாததால் தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரித்து வருவதாகவும், குழந்தை பெற எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் எதுவுமே பலனளிக்கவில்லை என குமுறியுள்ளனர். குழந்தையை தத்தெடுக்க வாரிசு நடிகர் முடிவெடுத்தாலும், மனைவி முட்டுக்கட்டை போட்டு வருவதால் நடிகர் அப்செட்டில் உள்ளாராம்.
வெளியில் எங்கு சென்றாலும், குழந்தை பற்றியே கேள்வி கேட்பதால் மன உளைச்சலில் உள்ள வாரிசு நடிகர், நடிகையை பிரிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

4 months ago
46









English (US) ·