ARTICLE AD BOX
கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில், கோவை போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த கொடூர சம்பவம், சீர நாயக்கன் பாளையம், ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ம் ஆண்டு நடைபெற்றது.
பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவியை ஏழு பேர் இணைந்து கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். இது தொடர்பாக போலீசார் மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணை முடிவில், நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார்.
அதில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழு பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு, சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் கண்டிப்பான நடவடிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.
 
                        3 months ago
                                46
                    








                        English (US)  ·