14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

1 week ago 31
ARTICLE AD BOX
The atrocity committed against a 14-year-old girl.. rowdy arrested!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் நீண்ட நாட்களாக ஆசை வார்த்தையுடன் பேசி திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார்.

பின்பு இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் வழக்கு என்பதால் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர்.

இதையும் படியுங்க: மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

அங்கு விசாரித்த மகளிர் போலீசார் சம்பவம் நடந்ததை உறுதி செய்தனர்.பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து வாழ்ந்து வந்த நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The station 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article