14 வயது சிறுமியை சீரழித்த சித்தப்பா.. வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!

1 month ago 26
ARTICLE AD BOX

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (39). இவரது மனைவி தனலட்சுமியின் அக்கா, தனது கணவரை பிரிந்து வேறொருவருடன் சென்று விட்ட நிலையில் அவரது 14 வயது குழந்தையை தனலட்சுமி வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியின் அக்கா மகளான 14 வயது  சிறுமியிடம் வினோத் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் வீட்டிற்கு தெரிய வரவே வினோத் வெளிநாட்டிற்கு கொத்தனார் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து  கடந்த 2019 அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி தனலட்சுமி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அக்கா மகளை தனது கணவர் வினோத் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார்.

அதே நேரத்தில் கணவர் வெளிநாடு சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

The uncle who abused a 14-year-old girl

இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி மாதம் 26-ஆம் தேதி துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார் வினோத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவள்ளூரில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செயல்பட தொடங்கியதையடுத்து வழக்கு விசாரணை அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த வினோத் சிறுமியை மிரட்டியதால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் டி. விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடைபெற்று நேற்று நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம்  அபராதமும், சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காக 3 வருடம் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம்  அபராதமும், பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம்  அபராதமும், உறவுக்காரன் என்ற முறையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம்  அபராதமும் என மொத்தம் 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் சிறுமியின் சித்தி தனலட்சுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கும் நீதிபதி உமா மகேஸ்வரி பரிந்துரை செய்தார். தீர்ப்புக்கு பின் வினோத் புழல் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

  • FAREWELL for Vijay... A pleasant surprise from the Jananayagan team விஜய்க்கு PAKKA FAREWELL… ரசிகர்களுக்கு COMPLETE MEALS.. ஜனநாயகன் அப்டேட்!!
  • Continue Reading

    Read Entire Article