15 வயது சிறுமி கர்ப்பம்… 75 வயது முதியவருக்கு சிறை : அம்பலமான நாடகம்..!!

1 month ago 15
ARTICLE AD BOX

15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் என 75 வயது முதியவரை தவறாக கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

கேரளா ஆலப்புழாவில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த மாணவி படித்த பள்ளியில் 75 வயதான காவலாளி பணியாற்றி வந்தார்.

மேலும் இவர்கள் குடும்பத்துக்கு அந்த முதியவர் உதவியாக இருந்து வந்ததும், நெருங்கிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது

ஒரு நாள் பள்ளிக்கு வந்த மாணவி சோர்வாக இருப்பதை கவனித்த சக மாணவிகள், என்ன பிரச்சனை என கேட்ட போது, பள்ளி காவலாளியால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவிகள், பள்ளி நிர்வாகத்திற்கு கூறியுள்ளனர். அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், மாணவி பேச்சை கேட்டு முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Girl gets pregnant... 75-year-old man jailed for saving lover!

பின்னர் இந்த வழக்கு செங்கன்னூர் நீதிமன்றத்தில் நடந்த போது, நீதிபதி மாணவியிடம் கேள்வி எழுப்பினர். அபபோது அவர், தனது காதலனை காப்பாற்ற காவலாளி மீது பொய் புகார் அளித்தாக கூறியதை கேட்டு ஷாக் அடைந்த நீதிபதி, உடனே காதலனை கைது செய்ய சொல்லி உத்தவிட்டார்.

மேலும் உரியமுறையில் விசாரணை நடத்ததாத போலீசாரை கண்டித்த நீதிபதி, முதியவரை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Saindhavi congratulate  gv prakash for national award ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி வைத்த இன்ஸ்டோ ஸ்டோரி; மீண்டும் ஜோடி சேர்ந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!
  • Continue Reading

    Read Entire Article