ARTICLE AD BOX
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை நாங்குநேரி அடுத்த வாகைகுளத்தில் வசித்து வரும் காளீஸ்வரி என்பவருக்கு 32 வயது ஆகிறது. திருமணமாகி 8 வயது மகன் உள்ளார்.
இதையும் படியுங்க: சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
இவர் பரப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து இருவரும் சந்தித்து பேசி வந்த நிலையில், காளீஸ்வரி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து சிறுவனுடன் தங்கியுள்ளார். அப்போது சிறுவனை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், நாங்குநேரி மகளிர் காவல்நிலைய போலீசார் காளீஸ்வரியை போக்சோவில் கைது செய்துள்ளனர்.
