ARTICLE AD BOX
கேரள ஆலப்புழாவில் நடந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையல் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவியுடன் ஸ்ரீஜித்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் தவறான உறவு வரை சென்றது.
இதையும் படியுங்க: இளைஞரின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்… சென்னை வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்!
இதையறிந்த ஸ்ரீஜித் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீஜித் மாணவியுடன் வசிக்க தொடங்கினார். விவாகரத்து வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஸ்ரீஜித் 17 வயது மாணவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
