18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

1 week ago 11
ARTICLE AD BOX

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், நைனிடாலில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரை கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.

இதன்படி, தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய அவர்கள், பேராசிரியரை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர், பல்கலைக்கழகம் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அவர்களது அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

மேலும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 47 லட்சம் ரூபாயையும் அவர்கள் நூதனமாக கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு சுமார் 18 நாட்கள் வரை பேராசிரியரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து, விடுவிக்கப்பட்ட அவர், கடந்த வாரம்தான் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

Longest Digital Arrest in uttarakhand for 18 days

மேலும், இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி அங்குஷ் மிஸ்ரா கூறுகையில், “ஒருவரை 18 நாட்கள் டிஜிட்டல் அரஸ்டில் வைத்திருந்தது இதுவே முதல்முறையாகும். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அமன் குஷ்வாஹா என்பவர்தான், இவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?

அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியைத் தேடி வருகிறோம். டிசம்பர் 5ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அவரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்து மிரட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் அரஸ்ட் என்றால் என்ன? Digital Arrest என்பது சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசு தொடர்புடைய அதிகாரி பேசுவதாக ஒரு செல்போன் அழைப்பு வரும். அவர்கள், உங்களது முறையற்ற பொருள் ஒன்று தங்களிடம் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்க பணம் வேண்டும் எனவும் மிரட்டி, அவர்களை தங்களது கட்டுப்பாட்டிலே வைத்திருப்பர்.

  • Radhika Sarathkumar Talk About Dhanush in Shooting Spot படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!
  • Continue Reading

    Read Entire Article