ARTICLE AD BOX
ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரெயிலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. இந்த நிலையில் “கூலி” திரைப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி படத்துக்கு “A” சர்ட்டிஃபிக்கேட்டா?
அதாவது “கூலி” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு “A” சான்றிதழ் அளிக்கப்பட்டதே இல்லை. 1980களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படங்களான “மூன்று முகம்”, “சிவா” ஆகிய திரைப்படங்களுக்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இல்லவே இல்லை என அடித்து சொல்லலாம்.
#Coolie censored 🅰️ #Coolie releasing worldwide August 14th 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/p2z6GEOb6K
— Sun Pictures (@sunpictures) August 1, 2025அந்த வகையில் “கூலி” திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இத்திரைப்படத்தில் அதிக அளவு வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என யூகிக்க முடிகிறது.
