ARTICLE AD BOX
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 2½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை என்கவுன்டர் செய்த போலீசார்.
இதையும் படியுங்க: தேசிய கீதத்திற்கு பிறகு தான் தமிழ்த் தாய் வாழ்த்து.. தமிழகத்தில் மாற்ற வேண்டும் : ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆவேசம்!
உத்தரபிரதேசம் லக்னே மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கூலித் தொழிலாளியின் 2½ வயது பெண் குழந்தையை வேறு இடத்திற்கு தூக்கி சென்ற மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்து தப்பினான்.
இதையறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலைமையில் இருந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பைக்கில் வந்த தீபக் வர்மா என்பவன் தான் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீபக் வர்மாவை போலீசார் தேடி வந்த நிலையில், 20 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்

மேலும் அவன் போலீசாரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், உடனே போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். இதில் காயமடைந்த கொடூரன், சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவத்தை அடுத்து போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறார். என்கவுன்டர் செய்ததற்கு மக்கள் உத்தரபிரதேச காவல்துறையை கொண்டாடி வருகின்றனர்.
