2 வயது மகள் உயிரிழப்பு..உடைந்து போன பிரபல கிரிக்கெட் வீரர்.!

6 hours ago 5
ARTICLE AD BOX

மகளை இழந்த துக்கத்தில் ஹஸ்ரத்துல்லா

பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா ஷசாய் குடும்பத்தில் ஏற்பட்ட துயர நிகழ்வு ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

26 வயதான ஹஸ்ரத்துல்லா ஆப்கானிஸ்தான் அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளும்,45 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் அடித்து உலகளவில் கவனம் பெற்றவர்.மேலும் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து இந்தியாவின் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்ததோடு, சர்வதேச டி20 போட்டிகளில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து,கெயில் மற்றும் யுவராஜ் சாதனையையும் முறியடித்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் விளையாடிய ஹஸ்ரத்துல்லா அதன் பிறகு நடந்த சாம்பியன் டிராபி தொடரில் கலந்து கொள்ளவில்லை.அவரின் மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகி இருந்தார்,இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக, அவரது 2 வயது மகள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.

இந்த செய்தியை அவரது சக வீரரும் நண்பருமான கரீம் ஜன்னத் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில் “இந்த வேதனையான செய்தியை பகிர்ந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.எனது சகோதரர் போன்ற ஹஸ்ரத்துல்லா தனது மகளை இழந்து மனம் உடைந்து உள்ளார்.இந்த மிகுந்த இக்கட்டான நேரத்தில்,ஹஸ்ரத்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நாம் அனைவரும் இருப்போம்,உங்கள் பிரார்த்தனைகளில் அவர்களின் குடும்பத்தினரை நினைவில் கொள்ளுங்கள்” என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார்.

  • Pawan Kalyan Hindi Controversy இந்தியில் டப் செய்வாங்களா..ஆனால் இந்தி வேண்டாமா..பவன் கல்யாண் விளாசல்.!
  • Continue Reading

    Read Entire Article