20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!

1 week ago 10
ARTICLE AD BOX

அமீர்கானின் நெகிழ்ச்சி செயல்

இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான முயற்சிகளையும் செய்து வருகிறார்.

இதையும் படியுங்க: பட்டும் திருந்தல..’ரெட்ரோ’ படப்பிடிப்பில் அலும்பு பண்ணும் சூர்யா..கண்ட்ரோல் செய்த நண்பன்.!

இவருடைய நடிப்பில் வெளிவந்த தங்கல் படம் உலகளவில் ரூ. 2000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படமாக இருந்தது, இது அவரது மார்க்கெட்டை உலகளவில் வளர்த்தது.

Aamir Khan revenue share

ஆனால்,சமீப காலமாக அமீர்கான் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.குறிப்பாக லால் சிங் சத்தா படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில்,சமீபத்திய ஒரு பேட்டியில் அமீர்கான் கூறிய அதிரடி தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.”கடந்த 20 ஆண்டுகளாக நான் எந்த படத்திற்கும் சம்பளம் பெறவில்லை,படம் வெளியான பிறகு லாபத்தில் இருந்து ஒரு பங்கை சம்பளமாக வாங்குவேன்” என்று அவர் கூறினார்.இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடையாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தற்போது இருக்கக்கூடிய சினிமா துறையில் ஓரிரு படங்கள் வெற்றிகொடுத்துவிட்டாலே நடிகர்,நடிகைகள் தங்களுடைய சம்பளத்தை மின்னல் வேகத்தில் உயர்த்தி வரும் சூழலில்,நடிகர் அமீர்கானின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!
  • Continue Reading

    Read Entire Article