ARTICLE AD BOX
பன்முக திறமை கொண்ட நடிகர்…
1970களில் வெளிவந்த “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்” போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் ஜீ.சீனிவாசன். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இம்மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக தனுஷின் “வேங்கை” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடிகர் மட்டுமல்லாது 8 திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் மூன்று திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவரும் ஆவார்.
ஜி.சீனிவாசன் மரணம்
இந்த நிலையில் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு இவரது மகன் ஒரு சாலை விபத்தில் இறந்துபோனார் என்பது கூடுதல் தகவல்.