ARTICLE AD BOX
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை போல நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பீகார் மாநிலத்தில் வரக்கூடிய அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான புதிய வாக்காளர் பட்டியலை பீகார் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.
ஏற்கனவே வாக்காளர்களாக இருந்த சுமார் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டு ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் என்பது வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வீட்டில் ஆள் இல்லை என வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது.
வரக்கூடிய தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விடும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு, அதிமுக காணாமல் போகிறதா கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பது தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.
அவர் முதல் நாள் ஒன்று பேசுகிறார் மறுநாள் ஒன்று பேசுகிறார் ஒன்றுக்கொன்று முரண்பாடாக பேசுவதையே வழக்கமாக எடப்பாடி அவர்கள் வைத்திருக்கிறார்கள். முதலில் அவர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரட்டும்.
அதிமுக பாஜக கூட்டணியே ஒரு ஒன்றுபட்ட கூட்டணியாக இல்லாமல் ஒருத்தர் கூட்டணி ஆட்சி என்கிறார் ஒருத்தர் தனி ஆட்சி என்கிறார். முதலில் பாஜக அதிமுக கூட்டணி வேலையை ஒழுங்காக அவர் பார்க்கட்டும்.
ஆடு நினைகிறதே என ஓநாய் அழுவுதாம் என்கிற பழமொழி சொல்வார்கள் அந்த மாதிரி தான் இருக்கிறது எடப்பாடி கூறுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
