2026 பாஜக கனவு பலிக்குமா அண்ணாமலைக்கு செக்.. அதிமுக இரட்டை கணக்கு!

3 months ago 40
ARTICLE AD BOX

2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை: ”தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பர். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கப் போகிறதா? மக்களுடைய பிரச்னைகளை முன்வைத்து அதனை தீர்ப்பதில் முனைப்பாக இருக்கும் கட்சியே அதிமுக” என இன்று டெல்லியில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக, நேற்று மாலை திடீரென டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட்டார். பின்னர், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட அதிமுக பிரமுகர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தனர்.

EPS

ஆனால், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என்று இபிஎஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதும், அதற்கு அதிமுக பிடி கொடுக்காமலே இருந்து வருவதும் அரசியல் மேடையில் பேசப்பட்டு வரும் ஒன்றுதான்.

இதையும் படிங்க: குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்.. விற்க நினைத்த காதலி திடுக்!

இந்த நிலையில், இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது. மீண்டும் கூட்டணி அமைக்கும் நிலைப்பாட்டிலே இருதரப்பும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை பாஜக உடன் அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அதிமுக முன்வைக்கும் எனக் கூறப்படுகிறது.

காரணம், அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை குற்றம் சாட்டியது என பழைய பகை இருப்பதால், அவரை மாற்ற அதிமுக கோரும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதிமுக உடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் வேரூன்ற பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், 2026 கணக்கை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Manoj Bharathiraja dared to commit suicide.. Wife saved him தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!
  • Continue Reading

    Read Entire Article