ARTICLE AD BOX
தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குனர் கோபி இயக்கத்தில் தினமலர் தினேஷ் அறிமுகம் ஆகி நடித்தும் பிரபல குணச்சித்திர நடிகர் அப்புகுட்டி, மற்றும் கே பி ஒய் ஆனந்த் பாண்டியன் நடித்துள்ள யாதும் அறியான் என்ற திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இன்று காலை வெளியான திரைப்படத்தை இயக்குனர் கோபி மற்றும் நடிகர் தினேஷ் அப்புகுட்டி ஆனந்த் பாண்டியன் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
இதைத்தொடர்ந்து கேக் வெட்டி ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் நடிகர் தினேஷ் மற்றும் அப்புகுட்டி ஆனந்த் பாண்டியன் ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் 2026 இல் தமிழக முதல்வர் விஜய் என பத்திரிக்கை சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து யாதும் அறியான் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி மக்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது படம் நன்றாக வந்துள்ளதாக எல்லோரும் கூறுகின்றனர் ரசிகர்கள் இன்னும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
உங்கள் வீட்டு பையன் ஆனா என்னை மேன்மேலும் வளருவதற்கு தங்கள் ஆதரவு தர வேண்டும். முதல் படம் என்பதால் முதலில் நடிக்கும் போது கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் போக போக நன்றாக நடித்துள்ளேன்.
தற்போது படம் வெளியாகி மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது இதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என அறிமுக நடிகர் தினேஷ் தெரிவித்தார்
தொடர்ந்து இயக்குனர் கோபி கூறுகையில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. திரில்லர் காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர் தற்போது குறைந்த அளவிலான திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது.
ரசிகர்களின் கருத்துக்கு பின்பு அதிக திரையரங்குகளில் வெளியாகும் திரையரங்குகள் கிடைப்பதில் எங்களுக்கு சிக்கல் உள்ளது. ரசிகர்களுக்கு த்ரில்லர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் என்டர்டைமெண்டும் படத்தில் உள்ளது என அவர் தெரிவித்தார்.
