ARTICLE AD BOX
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் சாச்சனா. இவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சாச்சனா கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி அவருக்கு சில அறிவுரைகளையும் கூறினார்.

இரட்டை சகோதரிகளான சாச்சனா, சாதனா போட்டோக்கள் இணையத்தில் அதிகமாக பகிர்ந்தன. இருவரும் அண்மையில் வெளியான லெவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 22 வயதே ஆகும் சாச்சனாவின் சகோதரி சாதனா தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், கணவர் முரளியை பிரிதாகவும், இருவரும் பரஸ்பரமாக எடுத்த முடிவு என அறிவித்துள்ளார்.
