23 வருஷம் ஆகிடுச்சு, எப்படி மறக்கமுடியும்?- சிம்ரன் மனசுல இப்படி ஒரு துயரமா? அடப்பாவமே!  

3 weeks ago 30
ARTICLE AD BOX

இடுப்பழகி சிம்ரன்

90ஸ் கிட்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். இந்த 49 வயதிலும் அவர் இளமையாகவே இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் கூட ரம்மியமாக தோன்றி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 

“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து சிம்ரன் “டூரிஸ்ட் பேமிலி”  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் நேற்று தனது எக்ஸ் தளத்தில் மன வருத்தத்துடன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். 

simran sharing her memories of her sister simran

உன்னைய மறக்கமுடியுமா?

சிம்ரனின் தங்கையான மோனல் 2000களில் மிக பிரபலமான நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்தார். “பார்வை ஒன்றே போதுமே”, “பத்ரி”, “சமுத்திரம்” போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மோனல் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அக்காலகட்டத்தில் கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

simran sharing her memories of her sister simran

அந்த வகையில் மோனல் இறந்து 23 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் சிம்ரன் தனது நினைவஞ்சலியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்த எக்ஸ் தள பதிவில், “உன்னை நினைக்காமல் ஒரு நாளை கூட கடந்ததில்லை மோனல், இந்த 23 வருடத்தில். இன்னமும் சில அமைதியான தருணங்களில் உன்னுடைய நினைவின் துண்டுகளையே தேடிக்கொண்டிருக்கிறேன்” என தனது தங்கையின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். சிம்ரனின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • simran sharing her memories of her sister simran 23 வருஷம் ஆகிடுச்சு, எப்படி மறக்கமுடியும்?- சிம்ரன் மனசுல இப்படி ஒரு துயரமா? அடப்பாவமே!  
  • Continue Reading

    Read Entire Article