ARTICLE AD BOX

திருப்பூரைச் சேர்ந்தவர் தனுஷ். வயது 24. இவர் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து ஆவடி பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் காவலர் தனுஷ் டேக் வாண்டோ என்னும் கராத்தேயில் தமிழ்நாடு காவல்துறையில் தாம்பரத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து இன்று தன்னுடைய சக காவலர்களோடு காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு எட்டையாபுரத்தில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர்.
அப்பொழுது தனுஷ் மட்டும் நீரில் மூழ்கி இறந்துள்ளார். உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற சோமங்கலம் காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் ஒருவர் கிணற்றில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
The station 24 வயது துடிப்பான காவலர்.. நொடிப்பொழுதில் நடந்த துயரம் : அதிர்ந்து போன காவல்துறை! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.