25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!

2 weeks ago 11
ARTICLE AD BOX

குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு அலைபாயுதே,காதலுக்கு மரியாதை,கண்ணுக்குள் நிலவு,அமர்க்களம்,என பல காதல் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தார்.

இதையும் படியுங்க: வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடித்த போது,இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்,திருமணத்திற்கு பிறகு குடுப்பத்திற்காக நடிப்பில் இருந்து விலகி அஜித்திற்கு மிகவும் பக்க பலமாக செயல்பட தொடங்கினார்.

Shalini Returns to Cinema

அஜித்தின் சினிமா மற்றும் ரேஸின் வெற்றிக்கு பின்னால் ஷாலினியின் பங்கு முக்கியமான ஒன்றாக அமைந்து வருகிறது,அந்த அளவிற்கு தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்,மேலும் இப்படத்தில் ஷாலினி ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஷாலினி நடித்திருந்தால் கிட்டத்தட்ட 25வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளார்,இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

  • Lucky Baskhar Movie OTT Record தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!
  • Continue Reading

    Read Entire Article