25 பவுன் கொடுத்தும் பத்தல.. மனைவி தற்கொலை.. 4 பேருக்கு பேரிடி!

1 month ago 20
ARTICLE AD BOX

அரியலூரில், கூடுதல் வரதட்சணைக் கேட்டதால் தந்தை மாரடைப்பால் உயிரிழந்து, மனைவி தற்கொலை செய்த சம்பவத்தில் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் செந்தில் குமாரவேலு (32). இவருக்கும், அரியலூர் மாவட்டம், அண்ணா நகரைச் சேர்ந்த கனகவள்ளிக்கும், கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, 25 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேலும் 10 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் வாங்க பணம் தருமாறு பெண் வீட்டாரை செந்தில் குமாரவேலு குடும்பத்தினர் கேட்டுள்ளனர். எனவே, அவற்றை பின்னர் தருவதாக பெண்ணின் தந்தை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, திருமணத்துக்குப் பிறகு தம்பதி சென்னையில் வசித்து வந்தனர்.

இதன் பின்னர் நகை, பணம் கேட்டு கனகவள்ளியை, செந்தில் குமாரவேலு, அவரது தாய் கலாவதி (61), தம்பி ஹரிகிருஷ்ண வேலு (30) மற்றும் அவரது உறவினர் முருகன் (51) ஆகியோர் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனை அறிந்த ராஜேந்திரன் சென்னை சென்றுள்ளார். அப்போது, செந்தில் குமாரவேலு குடும்பத்தினர் அவரை அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Dowry issue in Ariyalur

அதன் பிறகும், நகை, பணம் வாங்கிவருமாறு கனகவள்ளியைத் துன்புறுத்தி, அரியலூருக்கு செந்தில் குடும்பத்தினர் அனுப்பியுள்ளனர்.இந்த நிலையில், தனது தந்தை உயிரிழந்ததற்கும், தனது இறப்புக்கும் செந்தில் குமாரவேலு, கலாவதி உள்பட 4 பேர்தான் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2018 ஜூன் 13ஆம் தேதி அரியலூரில் உள்ள தனது தாய் வீட்டில் கனகவள்ளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளை அறிக்கை வெளியிட எதற்கு இத்தனை தயக்கம்? சமாளிக்காதீங்க : திமுக மீது அண்ணாமலை காட்டம்!

பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் செந்தில் குமாரவேலு, கலாவதி உள்பட 4 பேரையும் அரியலூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி டி.செல்வம், குற்றம் சுமத்தப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

  • Popular Actress joined in Prabhas New Movie Spirit பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை… மாஸ் கூட்டணியுடன் வெளியான அறிவிப்பு!
  • Continue Reading

    Read Entire Article