ARTICLE AD BOX
சினிமா நடிகர்னா பணக்காரங்களா?
சினிமா என்பது ஒரு மாய வலை. சினிமாவில் ஒரே இரவில் உச்சத்திற்கு போவனர்களும் உண்டு ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்தவர்களும் உண்டு. சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிலர் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் பல நடிகர்கள் தினக்கூலியாகவே இருக்கிறார்கள். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்று அழைக்கப்படும் சின்ன சின்ன நடிகர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் சம்பளம் கொடுக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.
சம்பளம் கிடைக்காது, ஆனால்?
சினிமாவில் நடிகர்களுக்கு மட்டுமல்ல உதவி இயக்குனர்கள், உதவி டெக்னீஷீயன்கள் போன்ற பலரும் இது போன்ற அவல நிலையில்தான் உள்ளார்கள். இந்த நிலையில் பல திரைப்படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வரும் நடிகர் TSR தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சினிமாவில் 25 வருடம் இருந்தால் சம்பளம் கிடைக்காது, ஆனால் சோறு கிடைக்கும். சம்பளம் கிடைப்பதெல்லாம் அதிர்ஷ்டம் இருந்தால்தான் நடக்கும்” என பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.