₹250 கோடி சம்பளம் வாங்குகற… ரசிகர்களுக்கு பட டிக்கெட் FREEயா கொடுக்கலாமே? அமைச்சர் அன்பரசன்!

6 months ago 112
ARTICLE AD BOX
Anbarasan

குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் மாங்காடு நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாங்காடு மற்றும் கோவூர் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடைபெற்றது.

இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் இளைஞர் அணியில் இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் : நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குக்கள் வாங்க காரணம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டோம்.

நீங்க கூட என்னை திட்டி இருப்பீர்கள். தேர்தல் பணியை திட்டமிட்டு செய்ததால் வெற்றி பெற்றோம். இரண்டு மாதம்தான் ஆட்சி வந்தது போல் இருக்கிறது. ஆனால் 3 1/2 ஆண்டுகள் சென்று விட்டது. இன்னும் 1 1/2 ஆண்டுகள் சென்று விடும்.

ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை வாங்குகிறார்கள். படம் ரிலீஸ் ஆகும் போது இலவசமாக டிக்கெட் கொடுக்க வேண்டும்.

ஆனால் ரசிகர்களுக்கு 2 ஆயிரத்திற்க்கு டிக்கெட் விற்கிறார்கள். இவர்கள் நாட்டை பாதுகாத்திட முடியுமா? விஜய் போன வருஷம் தான் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகிறார். நாம் 15 ஆண்டுகளாக கொடுத்து வருகிறோம்.

கட்சி ஆரம்பிக்க போவது தெரிந்து தான் ஒரு ஆண்டாக இதனை கொடுத்து வருகிறார். இந்தியாவிலேயே 75 வயதான கட்சி நமது கட்சி தான் இந்தியாவிலேயே திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.

பாஜக காங்கிரஸ் அது தேசியக் கட்சி. இந்த நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என்பதற்கு பதிலாக 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என அமைச்சர் கூறியதால் கட்சி நிர்வாகிகள் 2006 இல்லை 2026 என கூறிய நிலையில் சுதாரித்து கொண்ட அமைச்சர் நான் சொல்வதை நீங்கள் எல்லாம் கவனிக்கிறீர்களா என்பதை சோதித்து பார்த்தேன். சரியாக கவனிக்கிறீர்கள் என சிரித்தபடி கூறியதால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

The station ₹250 கோடி சம்பளம் வாங்குகற… ரசிகர்களுக்கு பட டிக்கெட் FREEயா கொடுக்கலாமே? அமைச்சர் அன்பரசன்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article