ARTICLE AD BOX
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மார்ச் 3ஆம் தேதி,துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்த அவரிடம் மொத்தம் 14.8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன.நடிகை ரன்யா ராவ்,வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில்,எனக்கு மார்ச் 1ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது.
இதையும் படியுங்க: அதிசயம்.!இந்தியாவின் முதல் AI படம்..சாதனை படைக்குமா.!
அதில் பேசிய நபர் துபாய் சர்வதேச விமானநிலையத்தில் தங்கக்கட்டி இருக்கும் பையை வாங்க சொன்னார்,நானும் அங்கே 6அடி உயரத்தில்,வெள்ளை நிற ஆடையில் இருந்த அந்த நபரிடம் தங்க கட்டி இருந்த பையை வாங்கி விமானநிலைய கழிப்பறைக்கு சென்று யூடியூபில் எப்படி தங்கத்தை கடத்துவது என்று பார்த்தேன்.
அதற்கு முன்பாகவே அதிக ஒட்டும் திறன் கொண்ட பசை டேபை வாங்கி வைத்திருந்தேன்,பின்பு தங்கக்கட்டிகளை என்னுடைய உடம்பு மற்றும் காலணியில் ஒட்டி பெங்களூரு விமான நிலையத்திற்கு கடத்தி வந்தேன் என்று சொன்னதுடன்,இணையவழியில் என்னை தொடர்பு கொண்ட நபர் எனக்கு யாருனு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும்,கடந்த 6 மாதங்களில் 27 முறை துபாய் சென்று வந்ததாகவும்,புகைப்படம் எடுப்பதற்காகவும்,தனக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்புஉள்ளது ? இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

7 months ago
69









English (US) ·