ARTICLE AD BOX
பிரபலங்களுக்கு 2வது திருமணம் நடந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதுவும் சர்ச்சையான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் விவாத பொருளாக மாறியுள்ளது.
சமையல் கலைஞரான கோவை மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் 2வது திருமணம் செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிசல்டா ஜில்லா, மிருதன், வேலைக்காரன் என பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.
இவருக்கு ஏற்கனவே 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று விவாகரத்தானது. இவரது முதல் கணவர்ஜேஜே ப்ரெட்ரிக், இவர் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர்.
இருவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில், திருமணமான 5 வருடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்திய ஜாய், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.
அப்போது தான் மாதம்பட்டி ரங்கராஜூடன் காதல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 6 மாதம் முன்னே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான காதல் குறித்து பதிவு போட்டார்.
அப்போது முதலே இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி வந்தன. இதற்கிடையில் ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி, தனது இன்ஸ்டா பக்கத்தில், ரங்கராஜ் தான் தனது கணவர் என பதிவிட்டிருந்தார்.
முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல், ஜாய் கிரிசல்டாவை நேற்று திருமணம் செய்துள்ளார் ரங்கராஜ். இதில் ஜாய், 6 மாதம் கர்ப்பமாக உள்ளது புயலை கிளப்பியுள்ளது. முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இரு மகன்கள் உள்ள நிலையில் மாதம்பட்டி எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஸ்ருதி ரங்கராஜ் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், இரண்டாவது திருமணம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை, தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், என் இதயமும் ஆன்மாவும் இவர்களுடேன் முடிகிறது என பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் பணியாற்றும் பிரபலங்கள் இரண்டாவது திருமணம் செய்வது இது முதல்முறையல்ல, ஏற்கனவே பிரியங்கா, விஜய் டிவியில் பணியாற்றிய வசியை 2வது திருமணம் செய்துள்ளார்.
அதே போல, தற்போது மாதம்பட்டி ரங்கராஜூம் திருமணம் செய்துள்ளது விஜய் டிவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர்.
இதென்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை என்பது போல, நிகழ்ச்சிக்கு போன இடத்தில் காதல் வயப்பட்டு அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் இரண்டாவது திருமணம் செய்து வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
