2வது திருமணம் செய்த ரவி மோகன் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

9 hours ago 3
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய், அதிரடி ஹீரோ, சாதுவான ஹீரோ என என்ன கேரக்டர் கொடுத்தாலும் திறமையாக நடிப்பவர் ரவி மோகன். இவர் ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படியுங்க: பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டியை நிறுத்த போர் காரணம் இல்லையா? பிசிசிஐ புது விளக்கம்!

முன்னணி ஹீரோவாக வலம் வந்த ரவி, பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அண்மையில் மனைவியை விட்டு பிரிவதாக ரவி அறிவித்தார்.

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரபலங்கள் விவாகரத்து செய்வதாக வந்த தகவலில் ரவி பெயரும் வந்தது பேசுபொருளானது. இதன் பின் ரவி, தனது மனைவி மீது ஏராளமான புகார்களை சுமத்தினார்.

15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஜோடி பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மறு பக்கம் ரவி, பிரபல பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக உள்ளதாகவும், இதனால்தான் மனைவியை ரவி பிரிவதாக செய்திகள் வெளியானது.

Ravi mohan and Kenisha

இது வைரலான நிலையில், அப்போது இது குறித்து விளக்கம் அளத்த ரவி, நானும் கெனிஷாவும் நண்பர்கள், தயவு செய்து வதந்தியை கிளப்பாததீர்கள் என விளக்கமளித்தார்.

Ravi Mohan At #VelsWedding pic.twitter.com/qhligUrWiU

— Sekar 𝕏 (@itzSekar) May 9, 2025

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் வந்த நிலையல், ரவி மாப்பிள்ளை கோலத்திலும், கெனிஷா மணப்பெண் கோலத்தில் வந்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நெருக்கமாக இருவரும் அருகருகே அமர்ந்திருந்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் திரமணம் செய்து கெண்டனரா? அல்லது லிவ்விங் ரிலேஷன்ஷிப்பின் உள்ளார்களா என இணையவாசிகள் கிசுகிசுத்து வருகின்றனர்.

  • Ravi Mohan married for the second time? Video goes viral on the internet! 2வது திருமணம் செய்த ரவி மோகன் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
  • Continue Reading

    Read Entire Article