ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம் புல்லரம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரி – ஜோதி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகன் அஜய், கல் லூரி படிப்பை பாதியில் நிறுத்தி யதாகக் கூறப்படுகிறது. இந்நிலை யில் அஜய், கடந்த ஜூன் 27-ம் தேதி கொடைக்கானல் சுற்றுலா செல்வதாக கூறி செங்குன்றத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அபினேஷுடன் ஒடிசா சென்றுள்ளார்.
இதையும் படியுங்க: தமிழகத்தில் நாளை ஆட்டோ, பேருந்துகள் ஓடாது : நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிப்பு!
அங்கு 3 கிலோ கஞ்சா வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஊர் திரும்பும்போது. அங்குள்ள கும்பலிடம் சிக்கியுள்ளனர். அதில் அபினேஷ் தப்பியுள்ளார்.
இதற்கிடையே, ₹5 லட்சம் கொடுத்தால் மட்டுமே உயிருடன் விடுவதாக கும்பல் மிரட்டியுள்ளது. இது குறித்து பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாக அஜய் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை காவல்துறை வரையிலும் அஜய் குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே, அஜய் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக அபினேஷ் மூலம் பெற்றோர் அறிந்தனர்.

இதையடுத்து. அதிர்ச்சியடைந்த அஜய்யின் பெற்றோர், குடும்பத்தினர், அவரது உடலை மீட்டுத் தரக்கோரி திருவள்ளூர் – புல்லரம்பாக்கம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இந்தநிலையில் ஒடிசா சென்ற உறவினர்கள் அங்குள்ள காவல்துறையினர் உதவியுடன் அரசு மருத்துமனையில் உடற் கூராய்விற்கு பின் சடலத்தை தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சொந்த ஊரான புல்லரம் பாக்கம் கொண்டு வந்தனர்.
ஒடிசாவில் தமிழக இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த வழக்கில் நான்கு பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட அஜய் சடலம் ஒரு ஆய்வுக்கு பின் ஒப்படைக்கப்பட்டு வாகனம் மூலம் திருவள்ளூர் அருகே உள்ள புள்ளரம்பாக்கம் கிராமத்திற்கு வந்தடைந்தது