3 கோடி பட்ஜெட்? பாதி கூட கலெக்ட் பண்ணல! வாண்டடாக சிக்கிக்கொண்ட பாலாவின் காந்தி கண்ணாடி!

6 days ago 11
ARTICLE AD BOX

சின்னத்திரை காமெடியன் டூ ஹீரோ

விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர்தான் பாலா. இவர் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பட்டித்தொட்டி  எங்கும் அறியப்பட்டார். இவரது கவுன்ட்டர் காமெடிகள் மிகவும் பிரபலமானவை. 

இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எனினும் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் “காந்தி கண்ணாடி”. இத்திரைப்படத்தை செரிஃப் என்பவர் இயக்கியுள்ளார். இதில் பாலாவுக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

Kpy bala gandhi kannadi movie collection report

இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் “மதராஸி” திரைப்படத்தோடு வெளிவந்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே  பெற்றுள்ளது. ஆனாலும் இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் கொஞ்சம் கவலைக்கிடமாகவே உள்ளது. 

பாதி கூட தாண்டலை?

“காந்தி கண்ணாடி” திரைப்படம் ரூ.2.7 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் வெளிவந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை ரூ.1.3 கோடி ரூபாயே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த வாரம் இறுதி வரையான வசூல் நிலவரத்தை பார்த்தால்தான் இத்திரைப்படம் வெற்றியா அல்லது தோல்வியா என கூறமுடியும். 

  • Kpy bala gandhi kannadi movie collection report3 கோடி பட்ஜெட்? பாதி கூட கலெக்ட் பண்ணல! வாண்டடாக சிக்கிக்கொண்ட பாலாவின் காந்தி கண்ணாடி!
  • Continue Reading

    Read Entire Article