ARTICLE AD BOX
2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை வெளியான விருது பட்டியல் குறித்து பார்க்கலாம்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவான “பார்க்கிங்” திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் ராம்குமார் பால்கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிறந்த துணை நடிகருக்கான விருது இத்திரைப்படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று பிரிவுகளில் இத்திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி கதாபாத்திரத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது “ஜவான்” திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “12th Fail” திரைப்படத்தில் நடித்த விக்ராந்த் மாசேவுக்கும் முன்னணி கதாபாத்திரத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சண்டை வடிவமைப்புக்கான தேசிய விருது “ஹனுமன்” என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக நந்து மற்றும் பிருத்வி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது “வாத்தி” திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான விருது பாலகிருஷ்ணா நடித்த “பகவந்த் கேசரி” திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
