ARTICLE AD BOX
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல விஷயங்கள் வெளியாகியுள்ளது.
ஈழத்தமிழரான அவர் லண்டனில் செட்டில் ஆனார். DJ வாக உள்ள வசி ஏற்கனவே ஈழத்தமிழ் பெண்ணை திருமணம் செய்திருக்காரு. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் வசி, தனது மகளை வசி தனது தாயிடம் ஒப்படைத்துவிட்டு லண்டனில் செட்டில் ஆகியுள்ளார்.
இலங்கையில் EVENT நடத்தி வந்த வசி, இலங்கைக்கு வந்த பிரியங்காவுடன் நட்பாக பழகியுள்ளனர். 2022ல் முதல் கணவர் பிரவீனை பிரிந்த பிரியங்கா, அதே வருடத்தில் வசியை சந்தித்து நட்பாகி பின்னர் காதலராகியுள்ளனர்.
வசி இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தனுடைய சொந்த தங்கை மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வசி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. பிரியங்கா தனது வாழ்க்கையில் வந்த உடன், தனது மனைவியை பிரிய வசி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரியங்காதான் குடும்பத்தை பிரித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
அதே சமயம், வசிக்கு முதல் மனைவி இருப்பது முன்பே தெரிந்து கொண்ட பிரியங்காவுக்கு, மூன்று மகள்கள் இருப்பது தெரியாது என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது அவர் தாய் என்ற ஸ்தானத்திலும் உள்ளார்.

நேற்று பிக் பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவனி திருமணத்தை தாயாக இருந்து தாலி எடுத்துக் கொடுத்து நடத்திய பிரியங்கா, தனது கணவருடன் நடனமாடி மகிழ்ந்த வீடியோக்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
