3 வருட காதல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது… விவாகரத்து செய்யும் பிரபல நடிகை!!

2 months ago 35
ARTICLE AD BOX

சினிமா பிரபலங்கள் ஜோடியாக நடித்த நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், சிலர் அது உண்மை என்று கூறி திருமண பந்தத்திலும் இணைவதுண்டு. ஆனால் சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும் உண்டு. சமீப காலமாக பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அப்படித்தான் நடிகை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி. முதல் படத்தில் பிரபலமாகி விஜய், விஷால், ஆர்யா, ரவி மோகன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா.

கொரோனாவுக்கு பிறகு மார்க்கெட் இழந்து தவித் அவர், 2022ஆமம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். அந்த நபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்தார் ஹன்சிகா.

ஹன்சிகா தனது தோழியின் கணவரையே இரண்டாவதாக திருமணம் செய்தார். அந்த தோழிதான் ஹன்சிகாவுக்கும் சோஹைல்க்கும் திருமணம் செய்ய காரணமாக இருந்தவர். தோழியின் கணவரை காதலித்து அந்த ஜோடியை பிரித்து, அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணமும் நடத்திய ஹன்சிகா அதை ஆவணப்படமாகவும் வெளியிட்டார்.

Hansika Motwani Divorce

ஆனால் 3 வருடமாக நகர்ந்து சென்ற வாழ்க்கை தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவருக்குள் என்ன பிரச்சனை என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால் கோர்ட் படியேற முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

  • Famous actress Plan to getting divorced 3 வருட காதல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது… விவாகரத்து செய்யும் பிரபல நடிகை!!
  • Continue Reading

    Read Entire Article