ARTICLE AD BOX
டாஸ்மாக் முறைகேடு
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக திமுகவுக்கு நெருக்கமான பல புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும்.
ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக செய்திகள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தீஸ் என்பவரும் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் “STR 49”, “இதயம் முரளி” ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் கயாது லோஹர் ரத்தீஸின் மது விருந்தில் கலந்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் இவரை சேர்த்து 40 நடிகைகள் மது விருந்தில் கலந்துகொண்டதாகவும் செய்திகள் பரவியது.
எல்லாமே உருட்டு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி, “மது விருந்தில் 40 பேர் கலந்துகொண்டதாக செய்திகள் வந்தன. இதனை செய்தி என்று சொல்வதை விட வதந்தி என்றுதான் கூறவேண்டும். 40 நடிகைகளுடன் பார்ட்டி செய்ததாக கூறுகிறார்கள். அந்த செய்தியை பரப்பியவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், 40 நடிகைகளை முதலில் ஒரு பட்டியல் போடுங்கள் என்பதுதான்.
என்ன காரணம் என்றால், 40 நடிகைகளை முதலில் லிஸ்ட் போடவே முடியாது. அந்தளவிற்கு இங்கே நடிகைகள் பஞ்சமே இருக்கிறது. சும்மா வாய்க்கு வந்தபடி 40 நடிகைகளுடன் பார்ட்டி என்ற செய்தி எல்லாம் சுவாரஸ்யத்திற்காக பரப்பியதுதான்” என்று கூறியுள்ளார்.
Tags: cinema news, Dhanush, idly kadai, Kayadu Lohar, kollywood, latest news, Parasakthi, Producer Aakash Baskaran, silambarasan TR, sivakarhikeyan, tamil cinema news