ARTICLE AD BOX
பிரஜீன்
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காதலிக்க நேரமில்லை” என்ற தொடர் மிகவும் பிரபலமானது ஆகும்.

சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் ஜொலித்த பிரஜின், அதனை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு தாவினார். “தீக்குளிக்கும் பச்சை மரம்”, “பழைய வண்ணாரப்பேட்டை”, “ஆண் தேவதை” போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரஜின், தான் நடித்து டிராப் ஆன திரைப்படம் ஒன்றை குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
40 லட்சம் கொடுங்க
பிரஜின் தொகுப்பாளராக பணியாற்றிய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆனாராம். அத்திரைப்படத்தில் வடிவேலு போன்ற மிகப் பெரிய நடிகர்கள் எல்லாம் நடித்தார்களாம். 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு திடீரென அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு 40 லட்சம் கொடுத்தால் ஷூட்டிங் போகலாம் என கூறினாராம்.
அதற்கு பிரஜீன் “என்னால் அவ்வளவு காசெல்லாம் கொடுக்க முடியாது. நான் வேண்டுமென்றால் புராஜெக்ட்டில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என கூறிவிட்டாராம். அதன் பின் அத்திரைப்படத்தில் வேறு ஒரு ஹீரோ நடித்தாராம். எனினும் அத்திரைப்படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டதாம். இவ்வாறு ஒரு தகவலை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் பிரஜின்.