40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

2 weeks ago 16
ARTICLE AD BOX

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45.

இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 05.10.2020 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று சங்கரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

40 years in prison... A dramatic verdict by the court!

இவ்வழக்கில் முறையாக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்த விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் பாராட்டினார்.

மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பெறப்படும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?
  • Continue Reading

    Read Entire Article