4வது மனைவியுடன் சென்று முன்னாள் மனைவிகள் மீது புகாரளித்த அஜித் பட நடிகர்.. என்ன நடந்தது?

3 months ago 50
ARTICLE AD BOX

தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக, நடிகர் பாலா தனது முன்னாள் மனைவிகள் மீது கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம்: தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. பின்னர், மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இதனிடையே, மீண்டும் தமிழில் வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றார்.

மேலும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு கல்லீரல் தொடர்பான பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், பாலா தற்போது தனது 4வது மனைவி கோகிலாவுடன் கொச்சியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

Actor Bala

அதில், தனது முன்னாள் மனைவிகள் அம்ருதா மற்றும் எலிசபெத் ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார். மேலும், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ள பாலா, அஜு அலெக்ஸ் என்ற யூடியூபர் தொடர்ந்து தன்னைப் பற்றிய தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன், தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரண்டு துண்டான உடல்.. பதுங்கியிருந்த கும்பல்.. லிவ் இன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது எப்படி?

முன்னதாக, 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார் பாலா. ஆனால், அது விவாகரத்தில் முடிந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், 4வதாக தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்துகொண்டார்.

  • Actor Bala 4வது மனைவியுடன் சென்று முன்னாள் மனைவிகள் மீது புகாரளித்த அஜித் பட நடிகர்.. என்ன நடந்தது?
  • Continue Reading

    Read Entire Article