ARTICLE AD BOX

500 ரூபாயா, 1000 ரூபாயா? பாஜக கொடி அணிந்த பூசாரி தட்டில் பணம் வைத்த பாஜக வேட்பாளர்..!!!
திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி தேர்தல் விதிகளை மீறி சாமி தரிசனம் செய்த போது பெண் பூசாரியின் தட்டில் பணம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் சித்தம்பாக்கம், மொன்னவேடு, பீமன் தோப்பு
சென்றாயன்பாளையம் உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்த பின்னர் பெண் பூசாரிக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஆயிரம் ரூபாயை பூசாரி கற்பூர தீபாராதனை தட்டில் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் விதிகளை மீறி வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெண் பூசாரிக்கு ஆயிரம் ரூபாய் காணிக்கை தட்டில் கொடுத்த பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The station 500 ரூபாயா, 1000 ரூபாயா? பாஜக கொடி அணிந்த பூசாரி தட்டில் பணம் வைத்த பாஜக வேட்பாளர்..!!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.