ARTICLE AD BOX
சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தவர் கயாடு லோஹர். அஸ்ஸாமை சேர்ந்த இந்த நடிகை தற்போது தமிழ் இளைஞர்களின் நாடித் துடிப்பாக மாறியுள்ளார்.
இதையும் படியுங்க : பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!
சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் இவருடைய வீடியோக்கள், போட்டோக்கள் தான் வைரல். ஒரு படம் ஹிட் கொடுத்ததுக்கே அம்மணியை தலையில் தூக்கி வைத்துள்ளார்கள் நம்ம தமிழ் ரசிகர்கள். தொடந்து அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் அதற்குள் தெலுங்கு பக்கம் வாய்ப்புகளை கொட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் தலைகால் புரியாத கயாடு லோஹர், வந்த வாய்ப்புகளை எல்லாம் தக்க வைத்துள்ளார்.
அதாவது, 57 வயது நடிகரான ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போதுதான் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள கயாடு அதற்குள் சீனியர் நடிகர்களுடன் நடிக்கிறாரே.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது சரிதான். ஆனால் இவ்வளவு வேகம் வேண்டாமே, சீனியர் நடிகர்களுடன் நடித்தால் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியாது என ரசிகர்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.