6 மாசத்துக்கு எதுவும் கேட்காதீங்க.. திடீரென மாறிய தமிழிசை முகம்!

6 days ago 13
ARTICLE AD BOX

பாஜக – அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

மதுரை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் தமிழ் மொழி பிரதான மொழியாக உள்ள நிலையில், அம்மொழியை மத்திய அரசு அழிக்க நினைப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை திமுக கொண்டு வருகிறது.

திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் தமிழை அடிப்படை கல்வியைக் கொடுக்கவில்லை. தமிழகத்தில் தமிழ் மொழி தெரியாமலேயே ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது. மாநில மொழிகளில் பொறியியல், மருத்துவக் கல்வியைக் கொண்டு வரலாம் என கூறிய பின்னர், தமிழில் மருத்துவம், பொறியியல் கல்வியை ஏன் கொண்டு வரவில்லை?

எம்ஜிஆர் நிறுவிய தமிழ் பல்கலைக்கழகத்திற்குப் பின்னர் ஏன் தமிழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்படவில்லை? இந்தி மொழியைக் கொண்டாடுவது போல தமிழ் மொழியைக் கொண்டாடலாமே? மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி இருப்பதால் மூச்சு முட்டுகிறது என முதலமைச்சர் கூறியுள்ளார்.

Tamilisai Soundararajan

திமுக மத்திய அமைச்சரவையில் கூட்டணியில் உள்ளபோது மூச்சு முட்டவில்லையா? தமிழை வளர்க்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் தமிழ், ஆங்கிலத்தை வளர்த்து வருகிறார். மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை. மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என கூறுகிறோம். நாடாளுமன்றத் தொகுதி மறுவறையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது. திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்” என்றார்.

இதையும் படிங்க: போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

மேலும், அதிமுக எந்த ஒரு கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் இருக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்திற்கு தமிழிசை பதில் அளிக்கையில், “பாஜக – அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம். 6 மாதத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.

தம்பி விஜய், தமிழகத்தில் இருந்து திமுக அப்புறப்படுத்த வேண்டிய கட்சி என கூறியுள்ளார். எங்களது நிலைப்பாடும் அதுதான். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், 2026இல் திராவிட மாடல் அரசு நீக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக கால் பதித்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் சேர்ந்து கால் பதிக்கும் என்பதை மத்திய தலைமை முடிவு செய்யும்” எனக் கூறியுள்ளார்.

  • Kaaka Muttai Ramesh போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!
  • Continue Reading

    Read Entire Article