ARTICLE AD BOX
அதிமுகவைத் தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால் தான் தோற்றோம், பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்.
அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம். கூட்டணி குறித்து 6 மாதத்துக்கு முன்பு தெரிவிக்கப்படும்” என்றார்.
மேலும் பேசிய இபிஎஸ், “அதிமுகவைப் பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவைப் பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவைத் தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது” என்றார்.

முன்னதாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து களம் கண்டது. பின்னர், ஒரு சில காரணங்களால் கூட்டணி முறிந்தது. மேலும், பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்றே எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். குறிப்பாக, 2024 தேர்தல் களமும் இரு கட்சிகளும் தனித்தனியே சந்தித்தன.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு இந்த தடவ ஒர்க் அவுட் ஆகுமா…ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த முக்கிய அப்டேட்.!
மேலும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கினை வெட்டிக் கொண்டாடினார்.
